ராஜ பார்வை

எனது பார்வையில் படும் அனைத்தும் ராஜாங்கத்தில் இடமளிக்கப்படும்

பக்கங்கள்

சன் டீவி மற்றும் நக்கீரன் ஊடகங்களின் வியாபார யுக்தி!

நித்யானந்தரின் லீலைகளை சிறப்பாக படம் பிடித்த அவரது முன்னால் சீடர் லெனின் என்பவர் காவலர் அதிகாரியிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சுவாமியின்(!) அந்தரஙக அநியாயஙகளை தடுக்க வேறு வழியின்றி நடிகையுடன் கூடிய வீடியோவை அவருக்கு தெரியாமல் எடுத்தாக கூறியுள்ளார்.

அதனை சன் குழுமத்திற்கு அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை பலர் வியாபாரமாக்கியுள்ளனர். அவை

· சன் நியூஸ் “காணத்தவராதீர்கள்என்று பகுதி பகுதியாக பிரித்து காட்சிகளை வெளியிட்டு தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகபடுத்திக்கொண்டது. (தனது திரைப்படங்களில் இந்த கவனத்தை செலுத்தியிருந்தால் தமிழக மக்களில் பலர் காப்பாற்றபட்டிருப்பார்கள்.)

· நக்கீரன் தனது புத்தகங்களின் விற்பனையை கணிசமாக உயர்த்திக்கொண்டார். வண்ண படங்களுடன் வெளியிட்டு.. (நெற்றிக்கண் திறபபினும் குற்றம் குற்றமே என்றவரின் பெயரை வியாபார நோக்கிலேயே பயன்படுத்துகின்றனர்)

(ஆ)சாமியார்களைப் பற்றி நான் விமர்சித்து எழுத்துக்களை வீணாக்கப் போவதில்லை. ஏனெனில் இதெல்லாம் எதிர்பாத்ததுதான். ஆனால் மேற்குறிப்பிட்டவர்கள்தான் மிக மோசமான சமூக குற்றவாளிகாக நான் கருதுகிறேன்.

இறுதிவரை அதாவது, ஏமாற்றுப்பேர்வழி தண்டனை பெறும்வரை இவர்கள் போராடுவார்களா? என்பதே என்னுடைய ஆதஙகம்.


மேலும் மாலை மலரில் வந்த சில விபரங்கள்.

நித்யானந்தா ஆசிரமத்தில் வேலை பார்த்தவர் ஸ்ரீநித்ய தர்மானந்தா என்ற லெனின். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் 2004-ம் ஆண்டு முதல் நித்யானந்தா மீது ஏற்பட்ட பக்தி காரணமாக அவரது பெங்களூர் ஆசிரமத்துக்கு சென்று வரத் தொடங்கினேன். 2006 முதல் அங்கேயே தங்கி ஆசிரமத்தில் சேவை செய்தேன்.

அப்போது ஆசிரமத்துக்கு வரும் அப்பாவியான அழகான பெண்களிடம் தான் ஒரு கிருஷ்ணர் அவதாரம் என்று நித்யானந்தா சொல்வார். அதோடு அந்த பெண்களை கட்டிப் பிடிப்பார்.

அந்த பெண்களை கோபியர்என்றே நித்யானந்தா அழைப்பார். அவரால் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சிலர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

சந்தேகத்துக்கு இடமான முறையில் அந்த ஆசிரமத்தில் ஒருவர் இறந்துள்ளார். மற்றொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா அடிக்கடி உல்லாசமாக இருப்பார். லட்சக்கணக்கான பக்தர்களை ஏமாற்றும் இவர் செயலை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஞ்சிதாவுடன் நித்யானந்தா உல்லாசமாக இருந்ததை நான் ரகசியமாக படம் பிடித்தேன்.

இதனை தெரிந்து கொண்ட நித்யானந்தா என்னை மிரட்டினார். கடந்த மாதம் 18,19ந்தேதிகளில் சேலம் அருகே உள்ள சீரகப்பாடியில் ஆசிரம திறப்பு விழாவுக்காக நித்யானந்தா வந்தார். அவருடன் நானும் சென்றேன்.

அப்போது அவர் என்னை வேனுக்குள் அழைத்து சென்று ரஞ்சிதாவுடன் நான் இருந்ததை படம் எடுத்தாயா அதை கொடுத்துவிடு இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். அவருடன் இருந்த சீடர்களும் என்னை மிரட்டினார்கள். நான் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன். எனவே சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் லெனின் கூறி இருந்தார்.

இது தொடர்பாக சென்னையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

சேலம் ஆத்தூரை சேர்ந்த லெனின் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சாமியார் நித்யானந்தா மீது 295 (ஏ) (மத உணர்வை துன்படுத்துதல்), 420 (மோசடி), 3¤76 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல்), 506 (1) (மிரட்டல்), 120 (பி) சதித்திட்டம் தீட்டுதல்) ஆகிய 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் லெனின் நித்யானந்தரின் படுக்கை அறை காட்சிகள் அடங்கிய சி.டி. ஒன்றையும் கொடுத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுள்ளதால் வழக்குகள் அனைத்தும் அந்த மாநில போலீசாருக்கு மாற்றப்படும்.

இதற்கான ஏற்பாடுகள் தமிழக டிஜிபி மூலம் நடந்து வருகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக கர்நாடக போலீசாருக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் தமிழக போலீசார் செய்வார்கள்.

கேள்வி:- சென்னையில் யாராவது பாதிக்கப்பட்டு நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ளார்களா?

பதில்:- தனிப்பட்ட முறையில் யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் தரவில்லை. இதுவரை எங்களிடம் வந்த 2புகார்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேள்வி:- சாமியார் நித்யானந்தா தொடர்புடைய விவகாரம் உங்கள் எல்லைக்குள் இல்லாத பட்சத்தில் அவர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?

பதில்:- நாங்கள் விசாரிக்க முடியாது என்பதால்தான் வழக்குகளை கர்நாடக போலீசாருக்கு மாற்ற உள்ளோம்.

கேள்வி:- பர்மா பஜாரில் சாமியார் நித்யானந்தா சி.டி.க்கள் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் கூறப்படுகிறதே?

பதில்:- அப்படியா?

கேள்வி:- சாமியார் சி.டி. எவ்வளவு நேரம் ஓடுகிறது.

பதில்:- நான் சி.டி.யை பார்க்கவில்லை. (அருகில் இருந்த துணைக் கமிஷனர் ஸ்ரீதர் கூறுகையில் சாமியார் சி.டி. 2 1/2 மணி நேரம் ஓடுவதாக கூறினார்)

கேள்வி:- சாமியார் சி.டி. கிராபிக்ஸ் செய்யப்பட்டதா?

பதில்:- அது பற்றி எனக்குத் தெரியாது. நான் தொழில்நுட்ப வல்லுனர் இல்லை.

கேள்வி:- சாமியாருடன் படுக்கை அறையில் இருப்பது நடிகை ரஞ்சிதா தானா?

பதில்:- ஆம் ரஞ்சிதா தான்.

கேள்வி:- ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களிடம் புகார் வந்துள்ளதா? அவர் மீது விபசார வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- யாரும் புகார் தரவில்லை. நீங்கள் கேட்பது இதற்கு பொருந்தாது.

கேள்வி:- ரஞ்சிதா மிரட்டப்பட்டதாக உங்களிடம் புகார் வந்துள்ளதா?

பதில்:- இல்லை.

கேள்வி:- சாமியார் தொடர்பான ஆபாச காட்சிகள் டி.வி.யில் அடிக்கடி வெளியானது. இது போன்ற ஆபாச காட்சிகள் சிறுவர்- சிறுமிகள் மனதை பாதித்து கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக கூறப்படுவதால் இனி டி.வி.யில் ஆபாச காட்சிகள் வருவதை தடுப்பீர்களா?

பதில்:- பத்திரிகைகளுக்கே சென்சாரா?

இவ்வாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்

(நன்றி : மாலைமலர்)


சென்னை, பிப். 25-








மத்திய பட்ஜெட்டுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வேளாண்மை, கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து நல்லதொரு நிதி நிலை அறிக்கையினை அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர், பிரனாப் முகர்ஜியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
விவசாயிகளுக்கு வரும் 2010-2011ஆம் ஆண்டில் மூன்று லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க் கடன்கள் வங்கிகள் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும், மத்திய அரசின் விவசாயிகளின் கடன் ரத்து மற்றும் தள்ளுபடி திட்டம் 30-6-2010 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பும், விவசாயிகளின் பயிர்க்கடன்களுக்காக கூடுதலாக ஒரு சதவிகித வட்டி மானியம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருப்பதும் போற்றத்தக்கது.
கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 552 கோடி ரூபாய் இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத் தக்க ஒரு அறிவிப்பாகும்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில், நமது கோரிக்கையினையேற்று - பின்னலாடை ஏற்றுமதிக்கு பெரிதும் உதவிடும் சாயத் தொழிலுக்குத் தேவையான சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவிட மத்திய அரசின் நிதி உதவியாக ரூபாய் 200 கோடி ஒரு முறை மானியம் வழங்கப்படும் என்ற மிகப் பெரிய அறிவிப்புக்காக நான் எனது நன்றியினை மத்திய அரசுக்கும் குறிப்பாக பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமுதாயத்தில் உள்ள அடித்தள மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் சமூக நலத் திட்டங்களுக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 674 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதும் , சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்விற்கு 22 ஆயிரத்து 300 கோடி ரூபாய் - பள்ளிக் கல்விக்கு 31 ஆயிரம் கோடி ரூபாய் - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 40 ஆயிரத்து 100 கோடி ரூபாய் என்ற அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்று மகிழத்தக்க அறிவிப்புகளாகும்.
மேலும் தொடர்ந்து நாம் விடுத்து வரும் வேண்டுகோளையேற்று, இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்ட தற்போது அனுமதிக்கப்படும் தொகையான ரூபாய் 35 ஆயிரம் என்பது 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்திருப்பதற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
மத்திய தர வகுப்பினருக்கு உதவிடும் வகையில் வருமான வரி வீதங்களைக் குறைத்து சலுகை அளித்திருப்பதும் மகிழ்ச்சியினை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.
சமூக நீதியையும், பொருளாதார வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் 2010-2011ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்துள்ள மத்திய அரசுக்கு எனது பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.