நல்லெண்ணத்தின் அபார ஆற்றல்!
எனது சிந்தனை
என்னைப் பற்றி !

இன்றைய சிந்தனை
பக்கங்கள்
அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபத்திற்கு இரவு 10 மணிக்கு எழுந்தருளுகிறார். அங்கு தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடக்கிறது. இந்நிகழ்ச்சியிலும் பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.

கோபத்தின் உச்சியில் ரஜினி - சுவாரஸ்யமான தகவல் !
பல ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு விழாவில்(சிவாஜி கணேசனின் 200-வது படமான திரிசூலத்தின் விழா என்று நினைக்கிறேன்.. இலங்கையின் 'Sakthi FM'- இல் கேட்ட ஞாபகம்)பங்கேற்றுவிட்டு தமிழ் சினிமா நட்ச்சத்திரங்கள் சென்னை திரும்புவதர்க்காக மதுரை விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்..
விமனான நிலையத்தில் இருந்த 'Duty Free Shop' -க்கு சென்ற ரஜினி குடிப்பதற்கு சோடா வேண்டுமென்று கேட்டுள்ளார்... ரஜினியை பார்த்து வாயடைத்துப்போன கடையில் இருந்தவருக்கு அவனது தலைவனை நேரில் பார்த்த சந்தோஷத்தில் அதிரடியாக கடை முழுவதும் தேடி இருக்கிறார் ஒரு சோடாவுக்காக.. கிடைக்கவில்லை என்ற சோகத்துடன் .. 'சாரி சார்.. சோடா ஸ்டாக் இல்ல'-ன்னு சொல்லி இருக்கார்.. வந்துதே ரஜினிக்கு கோபம்.. 'பளார்' என்று ஒரு அறை அறைந்துவிட்டு - ' என்ன தைரியம் சோடா இல்லை-னு சொல்லறே... எனக்கு வேண்டும் என்று தெரியாதா' என்று கேட்டிருக்கிறார்.. அதற்க்கு அந்த கடையில் இருந்தவர் 'என்ன சார் அதுக்காக அடிச்சுட்டீங்க' என்றிருக்கிறார், பல பேர் முன்னிலையில் அரை வாங்கிய அவமானத்தை தாங்கிக்கொண்டு..
'ஆமாம்..அறைந்தது மட்டும் பத்தாது' என்று சொல்லி தனது பெல்ட்-ஐ கழற்றி அடிக்க முற்பட்டிருக்கிறார்.. இதை எதிர்பார்காத அந்த நபர் கடையிலிருந்து வெளியே ஓடி இருக்கிறார் உதவிக்காக கத்தியபடி.. ரஜினியையும் அவரது கோபத்தையும் பின்னர் கட்டுப்படுத்த நம்பியார் மிகுந்த பொறுமையுடன் முயற்சி செய்திருக்கிறார்.. ரஜினியின் கோபம் கட்டுக்கடங்காமல் இருந்திருக்கிறது.. அங்கிருந்த அப்பாவி உதவியாளர்கள் சிலரும் அந்த கோபத்திர்க்கு இரையாகி உதைவாங்கி இருக்கிறார்கள்... தன்னருகில் வந்து சமாதனம் சொல்ல நினைத்த சிலரையும் பொரிந்து தள்ளி இருக்கிறார் ரஜினி..
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு மூத்த விமான பெண் விமான ஊழியர்... 'I am sorry, we cannot take a mentally disturbed person on board' என்று கூறி விமானத்தின் உள்ளே நுழைய ரஜினியை அனுமதிக்கவில்லை... உடனே நம்பியார் 'இல்லை இல்லை.... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... அதிகமான வேலைப்பளு (over work) காரணமாகத்தான் அவர் அப்படி நடந்து கொண்டார்' என்று கூறி இருக்கார்.. மற்ற சில சினிமா நட்ச்சத்திரங்களும் எடுத்துக்கூறி இருக்கின்றனர்.. அதன் பின் சிறிய தயக்கத்துடன்... அந்த பெண் விமான ஊழியர்..'அப்படியென்றால் இந்த form-இல் விமானத்தில் அவரது நடத்தைக்கு நீங்கள் பொறுப்பு என்று கையெழுத்திட்டுக்கொடுங்கள்..அனுமதிக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்... பின்னர் நம்பியாரும், சிவக்குமாரும் கையெழுத்திட்டு கொடுத்த பின்னர் ரஜினியுடன் அந்த விமானம் கிளம்பியது..
நன்றி :http://www.addboxsl.com
உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமானமுறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.
அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை. அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள்.. அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.
அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,SURFEXCEL போடு கறை போயிடும்" என்றது.

மன உளைச்சல் உங்களை மாற்றும் முன் நீங்கள் அதை மாற்றுங்கள். உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லையா? உங்களுக்கு எப்போதும் மனக்கவலையா? உங்கள் கை நடுக்கம் மற்றும் உள்ளங்கை வியர்வை சுரக்கிறதா? இவை எல்லாம் மன உளைச்சலுக்கான அறிகுறிகள். மன உளைச்சலை கட்டுப்படுத்த முடியும், அது உங்களை கட்டுப்படுத்தும்முன். மன உளைச்சல் என்றால் என்ன? அன்றாட வாழ்க்கையில் நமக்கு உண்டாகும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றத்தின் நம் உடலின் பதில் தான் மன உளைச்சல் என்பது. இதில் ஹார்மோன்கள் மற்றும் அட்ரினாலின் வெளிப்பாடும் அடங்கும். அட்ரினாலின் சுரப்பியின் விளையாக இருதயத்துடிப்பு, சுவாசம் மற்றும் இரத்த சக்கரை அளவு கூடுகிறது. மேலும் இது, இரத்த ஓட்டத்தை செரிமான அமைப்பிலிருந்து தசைகளுக்கு மாற்றுகிறது. மட்டுமல்லாது அதிக நாட்கள் மன உளைச்சலுடன் வாழ்வது, நமது உடல் ஆரோக்கியம், உறவு மற்றும் சந்தோசங்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதும் மறுக்க முடியாதது. மன உளைச்சலுக்கான காரணங்கள் என்ன? நேர் மறையான மற்றும் எதிர் மறையான நிகழ்வுகள் இரண்டுமே மன உளைச்சலுக்கு காரணங்களாக அமைந்துவிடுகிறது. பொதுவான காரணங்களாக கருதப்படுபவை; பெரும்பாலும் வாழ்க்கை மாற்றங்கள்: அன்புக்குறியோரின் மரணம். விபத்து. சட்டப்பிரச்சனை, இடமாற்றம் கடன், உடல் நலக்குறைவு, திருமணம், கர்பம், புதிய பணி, விவாகரத்து, பணியின்மை. சுற்றுச்சூழல் நிகழ்வு; அதிகப்படியான ஒலி, போக்குவரத்து நெரிசல், நேர அழுத்தம், போட்டி, தொற்று நோய், மன உளைச்சலின் பாதிப்புகள் என்ன? உடலியல் பாதிப்புகள்; தலை மற்றும் வயிற்று வலி, தசை அழுத்தம், வேகமான இருதயத்துடிப்பு, தூக்கமின்மை, பசியின்மை அல்லது அதிக பசி, உள்ளங்கை வியர்வை, உணர்வியல் பாதிப்புகள்; பதட்டம், எளிதில் உணர்ச்சிவசப்படுதல், அதிகப்படியான கவலை, துன்பம், பற்றாமை எண்ணம், மனவியல் பாதிப்புகள்; கவனமின்மை, மறதி, நம்பிக்கையின்மை மன உளைச்சலை கட்டுப்படுத்துவது எப்படி? சிலர் எதிர் மறையான நடவடிக்கைகளான புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதை உட்கொள்வதன் மூலம் மன உளைச்சலை சமாளிக்க முற்படுவர். இது மன உளைச்சலை கட்டுப்படுத்தியதாக முகமூடியை தந்து இவர்களுக்கு ஆரோக்கியக் கேட்டை விளைவிப்பது மட்டுமல்லாது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும். இத்தகைய பழக்கங்கள் முற்றிலும் தவறு மற்றும் தவிர்கப்படவேண்டியதாகும். மன உளைச்சலை தகர்த்தெரிய; நேரத்தை சரியாக திட்டமிடுதல். தினசரி திட்டமிடல் அவசியம். மிக முக்கியமான செயல்களுக்கு முக்கியத்துவம், பெரிய தேவைகளை உடைத்து சமாளிக்க முடிந்த சிறியவைகளாக ஆக்குதல், ஒரு சமயத்தில் ஒரு வேலை மட்டுமே செய்தல் ஆகியவை இவற்றில் அடங்கும். செய்வதை நேர்மையாய் நமக்கு தகுதியான மற்றும் விருப்பமான வேலைகளை மட்டும் தேர்ந்தெடுத்தல். நம்மால் செய்ய முடிந்த வேலைக்கான திட்டமிடல் மற்றும் உற்றுநோக்குதல். முக்கியமான வாழ்க்கை மாற்றங்களை பிரித்தல். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொறு மாற்றத்திற்கும் போதிய இடைவெளி, அதாவது ஒரே சமயத்தில் பணி மாற்றம், புது வீடு வாகனம் வாங்குதல் ஆகியவற்றை தவிர்த்தல். நமக்கிருக்கும பிரச்சனைகளை பற்றி யாரிடமாவது பேசுதல். உதவிகோருதல் என்பது இயலாமையின் வெளிப்பாடாகிவிடாது. நமது பிரச்சனைகளை குடும்பத்தினரிடமோ, சக பணியாளரிடமோ, மேற்பார்வையாளரிடமோ அல்லது மதத்தலைவரிடமோ மனம்விட்டு பேசுவதன் மூலம் உணர்ச்சிவசப்படுவது குறையும் மற்றும் உளவியல் ரீதியாக ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றியிருத்தல். குடும்பத்தினரும் நண்பர்களும் தான் நம் வாழ்க்கையின் அங்கம், அவர்களே நமக்கு அன்பு, பாசம், நட்பு மற்றும் தேவையானபோது ஆதரவு தருபவர்கள். நம்மை நாமே விரும்ப கற்றுக்கொள்ளுதல். நம்மை கண்டு நாம் முதலில் சந்தோசப்படவேண்டும். மற்றவர் முன்னிலையில் நாம் எப்படி தோன்றமளிக்கின்றோம் என்பதில் கவலை கொள்ளாமல், நம் தோற்றத்தில் மகிழ்தல். நேர் எண்ணங்களின் வகையாதல் மிக முக்கியம். அது நமக்கு காட்டித்தரும், நம்மால் எதை மாற்ற முடியும் எதை நமது வாழ்வின் மிகச்சிறந்ததாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதை. ஆரோக்கியமான வாழ்க்கை. உடற்பயிற்சியின் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். சரியான உணவு உட்கொள்ளுதலும், அளவான உறக்கமும் மிக அவசியம். நமக்காக நேரம் ஒதுக்குதல். நமக்கு விருப்பமானவற்றை செய்ய நேரம் ஒதுக்குதல், பாட்டு, நடனம், ஓவியம், சுற்றுலா மற்றும் விளையாட்டு போன்றவற்றில் நமக்கு விருப்பமானவற்றை செய்தல். சோர்வாகும் போது சிறிது ஓய்வெடுத்தல். இளைப்பாற கற்றுக்கொள்ளுதல் ஆழ்ந்த சுவாச உடற்பயிற்சி, ஆசனம் போன்றவற்றையும் கற்றுக்கொள்ளுதல். ஆழ்ந்த சுவாசம் பயிற்சி. விழிசார் கற்பனை பயிற்சி. இந்த பயிற்சிக்கு 10-15 நிமிடங்கள் எடுக்கும். உங்களுக்கு நேரமிருந்தால் ஆழ்ந்த சுவாசப்பயிற்சியை தொடர்ந்து இதை செய்யலாம்.இந்த பதிவு jaihindpuram.blogspot.com என்ற வலைபூவிலிருந்து எடுக்கப்பட்டது
செய்தல்.