ராஜ பார்வை

எனது பார்வையில் படும் அனைத்தும் ராஜாங்கத்தில் இடமளிக்கப்படும்

பக்கங்கள்

thanks to aadhis.blogspot.com





கோபத்தின் உச்சியில் ரஜினி - சுவாரஸ்யமான தகவல் !






சூப்பர்ஸ்டார் பற்றிய விஷயம் என்பதால் மேட்டேரை எழுதறதுக்கு முன்னாடியே டிஸ்கிய போட்டுடுறேன் ! இந்த தகவல் ரஜினி பற்றிய 'The Name is Rajinikanth' என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் கூறியுள்ளதன் தமிழ் மொழியாக்கம் மட்டுமே ! ஒரு ரஜினி ரசிகனான நான் இந்த பதிவை போடுவதன் நோக்கம் - இந்த சம்பவத்தை பகிர்ந்துகொள்ள மட்டுமே..


பல ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு விழாவில்(சிவாஜி கணேசனின் 200-வது படமான திரிசூலத்தின் விழா என்று நினைக்கிறேன்.. இலங்கையின் 'Sakthi FM'- இல் கேட்ட ஞாபகம்)பங்கேற்றுவிட்டு தமிழ் சினிமா நட்ச்சத்திரங்கள் சென்னை திரும்புவதர்க்காக மதுரை விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.. 

விமனான நிலையத்தில் இருந்த 'Duty Free Shop' -க்கு சென்ற ரஜினி குடிப்பதற்கு சோடா வேண்டுமென்று கேட்டுள்ளார்... ரஜினியை பார்த்து வாயடைத்துப்போன கடையில் இருந்தவருக்கு அவனது தலைவனை நேரில் பார்த்த சந்தோஷத்தில் அதிரடியாக கடை முழுவதும் தேடி இருக்கிறார் ஒரு சோடாவுக்காக.. கிடைக்கவில்லை என்ற சோகத்துடன் .. 'சாரி சார்.. சோடா ஸ்டாக் இல்ல'-ன்னு சொல்லி இருக்கார்.. வந்துதே ரஜினிக்கு கோபம்.. 'பளார்' என்று ஒரு அறை அறைந்துவிட்டு - ' என்ன தைரியம் சோடா இல்லை-னு சொல்லறே... எனக்கு வேண்டும் என்று தெரியாதா' என்று கேட்டிருக்கிறார்.. அதற்க்கு அந்த கடையில் இருந்தவர் 'என்ன சார் அதுக்காக அடிச்சுட்டீங்க' என்றிருக்கிறார், பல பேர் முன்னிலையில் அரை வாங்கிய அவமானத்தை தாங்கிக்கொண்டு..

'ஆமாம்..அறைந்தது மட்டும் பத்தாது' என்று சொல்லி தனது பெல்ட்-ஐ கழற்றி அடிக்க முற்பட்டிருக்கிறார்.. இதை எதிர்பார்காத அந்த நபர் கடையிலிருந்து வெளியே ஓடி இருக்கிறார் உதவிக்காக கத்தியபடி.. ரஜினியையும் அவரது கோபத்தையும் பின்னர் கட்டுப்படுத்த நம்பியார் மிகுந்த பொறுமையுடன் முயற்சி செய்திருக்கிறார்.. ரஜினியின் கோபம் கட்டுக்கடங்காமல் இருந்திருக்கிறது.. அங்கிருந்த அப்பாவி உதவியாளர்கள் சிலரும் அந்த கோபத்திர்க்கு இரையாகி உதைவாங்கி இருக்கிறார்கள்... தன்னருகில் வந்து சமாதனம் சொல்ல நினைத்த சிலரையும் பொரிந்து தள்ளி இருக்கிறார் ரஜினி.. 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு மூத்த விமான பெண் விமான ஊழியர்... 'I am sorry, we cannot take a mentally disturbed person on board' என்று கூறி விமானத்தின் உள்ளே நுழைய ரஜினியை அனுமதிக்கவில்லை... உடனே நம்பியார் 'இல்லை இல்லை.... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... அதிகமான வேலைப்பளு (over work) காரணமாகத்தான் அவர் அப்படி நடந்து கொண்டார்' என்று கூறி இருக்கார்.. மற்ற சில சினிமா நட்ச்சத்திரங்களும் எடுத்துக்கூறி இருக்கின்றனர்.. அதன் பின் சிறிய தயக்கத்துடன்... அந்த பெண் விமான ஊழியர்..'அப்படியென்றால் இந்த form-இல் விமானத்தில் அவரது நடத்தைக்கு நீங்கள் பொறுப்பு என்று கையெழுத்திட்டுக்கொடுங்கள்..அனுமதிக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்... பின்னர் நம்பியாரும், சிவக்குமாரும் கையெழுத்திட்டு கொடுத்த பின்னர் ரஜினியுடன் அந்த விமானம் கிளம்பியது.. 

0 கருத்துரை இடுக ...: