ராஜ பார்வை

எனது பார்வையில் படும் அனைத்தும் ராஜாங்கத்தில் இடமளிக்கப்படும்

பக்கங்கள்

பச்சை பட்டு உடுத்தி
தங்க குதிரையில் அமர்ந்து
ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

தமிழகத்தில் நடை பெறும் முக்கிய விழாக்களில் மதுரை சித்திரை திருவிழாவும் ஒன்றாகும். இவ்விழாவில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் பிரசித்தி பெற்றதாகும்.
 
இச்சித்திரை திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவி லில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 5-ந்தேதி மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக் தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண காட்சியை கண்டு களித்தனர்.
 
இதேபோல் மற்றொரு பிரசித்தி பெற்ற விழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியாகும். இவ்விழா அழகர்கோவிலில் கடந்த 5-ந்தேதி தொடங் கியது. பின்னர் அழகர் கோவிலில் இருந்து சுந்தர ராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு 7-ந்தேதி மாலை பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று (வெள்ளிக் கிழமை) காலை 6 மணி அளவில் மதுரை மூன்று மாவடிக்கு வந்தார். அங்கு அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். எதிர்சேவை முடிந்ததும் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ் லைன், அவுட்போஸ்ட் வழியாக இரவு 9.30 மணி அளவில் தல்லாகுளம் பிரசன்னவெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். முன்னதாக வழி நெடுக அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் எழுந் தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
 
தல்லாகுளம் கோவிலில் பெருமாள் திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணிக்கு குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆகி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த திருமாலை அணிவிக்கப் பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் கருப்பணசாமி கோவிலில் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன் பிறகு அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து தங்க குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார்.
 
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை காண மதுரை மாவட்டம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மதுரையில் குவிந்ததால் நேற்று இரவில் இருந்தே எங்கு பார்ததாலும் பக்தர்கள் வெள்ளம் அலை மோதியது.
 
வைகை ஆற்றின் இருபுற கரைகளிலும், ஆற்றிலும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் இன்று காலை 7 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றிற்கு வந் தார். 7.05 மணிக்கு ஆற் றின் முகதுவாரத்திற்கு வந்தபோது அதிர்வேட்டு முழங்க கள்ளழகர் வரவேற் கப்பட்டார். 7.10 மணிக்கு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் அமர்ந்து ஆற்றில் இறங்கி னார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் சர்க் கரை நிரம்பிய சொம்பில் சூடம் ஏற்றி தீபாராதனை செய்து பக்தி பரவசத்துடன் கோவிந்தா... கோவிந்தா... என்று கோஷமிட்டனர்.
 
ஆற்றில் இறங்கிய கள்ளழகருக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சரியாக 7.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் அங்கபிரதட்ணமும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் அவர் எழுந்தருளுகிறார்.
 
அங்கு தங்கும் கள்ளழ கருக்கு நாளை (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஏகாந்த சேவை, பக்தி உலா நடக்கிறது. 8 மணிக்கு திருமஞ்சனமாகி சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தரு ளுகிறார். பிற்பகல் கருட வாகனத்தில் ஆரட்ராய் பிரசனமாகி மண்டூக முனி வருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார்.

அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபத்திற்கு இரவு 10 மணிக்கு எழுந்தருளுகிறார். அங்கு தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடக்கிறது. இந்நிகழ்ச்சியிலும் பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.

0 கருத்துரை இடுக ...: