கண்ணதாசன் யார்?
சினிமா கவிஞர்.
அப்புறம்?
அர்த்தமுள்ள இந்துமதம் போல இந்து மத புகழ்ப்பாடும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
அப்புறம்?
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடியதோடு நிற்காமல் மது, மாது என்று வாழ்ந்து காட்டியவர்.
அப்புறம்?
அவ்ளோதான் தெரியும் - வனவாசம், மனவாசம் படிக்கும் வரை. இந்த புத்தகங்களை படித்தபிறகு தான் அவர் அரசியலில் எவ்வளவு ஈடுபட்டு இருக்கிறார் என்றும், அதில் எவ்வளவு அடி வாங்கி இருக்கிறார் என்றும் தெரிந்தது.
----
’மருதநாட்டு இளவரசி’ படம் தயாராகிக்கொண்டிருக்கும் போதுதான் கருணாநிதியை பற்றி அறிந்தார் கண்ணதாசன். ’அபிமன்யு’ படத்தில் வரும் கருணாநிதியின் வசனங்கள், அவரை ஆறு நாட்கள் தொடர்ந்து அந்த படத்தை பார்க்கும் அளவுக்கு கவர்ந்தது. அப்பொழுது ஏற்பட்டது கருணாநிதியின் மீதான காதல் என்கிறார் கண்ணதாசன். கருணாநிதியை வகைத்தொகையில்லாமல் புகழ, அவரும் கண்ணதாசனை நேசிக்க ஆரம்பித்து இருக்கிறார். பிறகு, ’காதல் தேசம்’ வினீத், அப்பாஸ் போல இருந்திருக்கிறார்கள். எப்படி? ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்து தூங்கிற அளவுக்கு.
அந்நேரம் கருணாநிதி அரசியலிலும் இருந்ததால், பல விஷயங்களை கண்ணதாசனுடன் பகிர்ந்திருக்கிறார். திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய சமயம், கருணாநிதி பெரியார் செய்த ’கொடுமை’களை பற்றி கூறி இருக்கிறார். விலகியதில் பெரிதும் மகிழ்ந்திருக்கிறார். திமுக முதல் அறிமுக கூட்டத்திற்கு கருணாநிதியால் அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார் கண்ணதாசன்.
அச்சமயம் சினிமாவில் கருணாநிதி பட்டையை கிளப்பி கொண்டிருந்தார். கண்ணதாசன் பல வேலைகளை மாறி மாறி பார்த்து, முடிவில் ’கன்னியின் காதலி’ என்ற படத்திற்கு முதல் பாடலை எழுதினார்.
பிறகு கருணாநிதியுடன் பல கூட்டங்களுக்கு சென்றிருக்கிறார். சில அரசியல்வாதிகளுடன் பழகிய பிறகு அவருக்கு தோன்றியது, “கொண்ட கொள்கையில் எந்த அரசியல்வாதிக்கும் உறுதி இல்லை. எல்லா பிரச்சினைகளிலும் உயிரை கொடுப்பேன் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு, எத்தனை உயிர் இருக்கிறது?”
கண்ணதாசன் சொல்கிறார். “என் நண்பர் தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பது பற்றி அற்புதமான எழுதுவார். ஆனால், ஒரு பைசா பிச்சை போட மாட்டார். தொழிலாளர்களுக்காக, ரத்தம், நரம்பு என்று கட்டுரை எழுதுவார். ஆனால், அவரிடம் இருக்கும் தொழிலாளர்களுக்கு அதை கண்டு கொள்ள மாட்டார்”. விபச்சாரியிடம் கூட காரியம் முடிந்த பின்பு, காசை வாங்கி வந்தவராம் அவர் நண்பர்.
கண்ணதாசனும் அவர் நண்பரும் வாடகை கார் எடுத்து கொண்டு பெண்களுக்காக அலைந்திருக்கிறார்கள்.
முற்போக்கு என்கிற பேரில் வீட்டில் பொதுவில் வைக்க கூட முடியாதவாறு கதைகளை எழுதியவர் அவர் நண்பர். அதிலிருந்து அவர் எழுத்தை புறக்கணித்தார் கண்ணதாசன்.
----
“நான் தூத்துக்குடிக்கு பேச போகிறேன்?”
“உனக்கு என்ன பேச தெரியும்? எதுக்கு வீண் வேலை? வரவில்லையென்று சொல்லிவிடு”
இன்னொருவன் முன்னுக்கு வராமலிருப்பதே, தான் வாழ வழியென்பது எனது நண்பனின் சித்தாந்தம் என்கிறார் கண்ணதாசன்.
கல்லக்குடி போராட்டதிற்கு சென்று, சிக்கி, வழக்குக்காக அலைந்து, சிறையில் அடைப்பட்டு கிடந்ததில் அரசியல் வெறுக்க, சிறையில் விடுதலையான பிறகு பத்திரிக்கை ஆரம்பித்தார் கண்ணதாசன். கருணாநிதிக்கோ, கல்லக்குடி போராட்டம் நல்ல மைலேஜ்ஜை கொடுக்க, கட்சியில் உயரத்திற்கு சென்றார்.
அடுத்த வந்த தேர்தலில் திருக்கோஷ்டியூரில் நின்றார் கண்ணதாசன். ஏனோதானோவென்று பிரச்சாரம் செய்து தோற்றுவிட்டார். அதற்கு பிறகு வந்த மாநகராட்சி தேர்தலில், கொஞ்சம் கடுமையாகவே உழைத்திருக்கிறார். தேர்தலில், திமுக பெரும்பான்மை பெற்றது. ’சரி, நம்மை பாராட்டுவார் அண்ணா’ என்று நினைத்து கொண்டிருக்கும்போது, அண்ணா கருணாநிதியை மட்டும் பாராட்டி மேடையில் கணையாழி அணிவித்தார்.
கடுப்பான கண்ணதாசன் அண்ணாவிடம் போய்,
“என்ன அண்ணா! இப்படி சதி செய்துவிட்டீர்களே?”
“அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூட்டத்தில் போட்டுவிடுகிறேன்.” என்றார் அண்ணா.
-----
பிறகு திமுக வெறுத்து போக, கட்சியிலிருந்து விலகி சம்பத் தொடங்கிய த.தே.க. கட்சியில் சேர்ந்தார். பின்னால், அது காங்கிரஸில் ஐக்கியமாக, காமராஜருடன் நெருங்கினார். இன்னொரு பக்கம், சினிமாவிலும் வேகமெடுத்தார். கருணாநிதியோ, தமிழக அரசியலில் டாப் கியரில் சென்று கொண்டிருந்தார். கருணாநிதியை வெறுத்து கோபப்பட்டு தாக்கினார் கண்ணதாசன். கருணாநிதி, அதையெல்லாம் அப்போது அவருக்கு இருந்த மற்ற
பிரச்சினையினால் கண்டுகொண்டிருக்கமாட்டார்.
ஒரு கட்டத்தில் காமராஜரிடமும் முட்டினார் கண்ணதாசன். திமுக பகுத்தறிவு என்ற பேரில் ராமன், கிருஷ்ணன் என்று கடவுள்களை செருப்பால் அடித்து கடவுள் நம்பிக்கையை கேவலப்படுத்தியபோது, அவருக்கு வந்த ஆத்திரத்தில் இந்து ஆதரவு கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். முதல் போணி, துக்ளக்கில் “நான் ஒரு இந்து”.
அண்ணா நோய்வாய்பட்டு இறந்தப்பிறகு, கருணாநிதி காலையிலும் மாலையிலும் எம்ஜிஆரை சென்று பார்த்து அவருடைய ஆதரவை பெற்று, கட்சியின் தலைவர் ஆனார். நாவலர், அண்ணா சமாதியில் அழுது கொண்டிருந்தார். கண்ணதாசன் “அர்த்தமுள்ள இந்து மதம்” எழுதியிருந்தார். ’இந்திரா காங்கிரஸி’ல் சேர்ந்திருந்தார்.
அவருடைய கெட்ட நேரம், பிறகு கருணாநிதி இந்திராவுடன் கூட்டணி வைத்தார். “கருணாநிதிக்கு மேல் ஆளே இல்லை” என்று சொல்லும் அளவுக்கு கண்ணதாசன் நிலை ஆனது. அவரும் முடிவில் கருணாநிதி ஜோதியில் கலந்தார்.
----
இந்த புத்தகங்களில் கண்ணதாசன் மற்றவர்களை பற்றி மட்டும் எழுதவில்லை. தான் செய்த அயோக்கியத்தனங்களையும் எடுத்துரைத்திருக்கிறார். ரொம்ப அப்பிராணியாகவும் இருந்திருக்கிறார். கட்டுப்பாடில்லாத படகு போல் அலைகழித்திருக்கிறார்.
இந்த நிலையிலும் சினிமாவில் அவர் தொட்ட உயரம் அதிகம்தான். தன் கவிதை வரியால், கேட்போரை கட்டி போட்டார். கேட்போர் அனைவரையும் ரசிகராக்கினார். இதில் மட்டுமே, தன் முழு கவனத்தை செலுத்தியிருந்தால், இன்னும் பல சாதனைகளை செய்திருப்பார்.
இவர் ஏன் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை? சாணக்கியத்தனம் என்றைழைக்கப்படும் மொள்ளமாறித்தனம் பண்ண தெரியாததுதான்.
தங்கள் வாழ்க்கையை திறந்த புத்தகம் என்பார்கள் சிலர். நான் படித்த சுயசரிதைகளிலேயே இந்த புத்தகத்தில் தான், எந்த தயக்கமும் இன்றி தன் வாழ்க்கையை உண்மையிலேயே திறந்து வைத்திருக்கிறார் ஒரு ஆசிரியர்.
வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்வது போல் “பப்பரப்பேன்னு”.
எனது சிந்தனை
சமுக தொண்டே எனது பசியை போக்கும் என்று உணர்ந்த நான் பொது தொண்டு நிறுவனத்தை நடத்திக்கொண்டு வருகிறேன். மொழி, இனம் இவைகள் மனிதர்களை பிரிக்கும் ஒரு கருவியாக இருப்பதால் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனிதநேயத்தினை சிந்திக்கிறேன்.
என்னைப் பற்றி !

இன்றைய சிந்தனை
வலைப்பூவின் வாசனைகள்
-
▼
2009
(20)
-
▼
May
(18)
- கண்ணதாசனும் - கருணாநிதியும்
- என்ன கொடும சார் இது?.....
- மார்ச் 08 இல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?
- படிச்சுட்டு சிரிங்க...காசா?பணமா?
- என்னமோப்பா.! சொல்னுன்னு தோனிச்சு..சொல்லிட்டேன். அட...
- சுவர்களும்...சித்திரம் வரைபவர்களும்...
- என் மீது எந்தக் குற்றமுமில்லை
- பெற்றோர் - விலைமதிக்க முடியாத செல்வங்களே
- ஒரு பெரிய சல்யூட் அடிக்க வேண்டும்
- நல்லெண்ணத்தின் அபார ஆற்றல்!
- பென்சில் ஓவியங்கள் - ஹீரோக்களின் முகங்கள்
- விழுந்து விழுந்து சிரிங்க ....
- பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் அமர்ந்து ஆற்றி...
- கோபத்தின் உச்சியில் ரஜினி - சுவாரஸ்யமான தகவல் !
- ஒரு சிரியஸ் கதை : கட்டாயம் படிக்கவும்
- மன உளைச்சல் உங்களை மாற்றும் முன் நீங்கள் அதை மாற்ற...
- இந்த குழந்தைகளின் முகங்களை பார்க்கும்போது உண்டாகும...
- சத்தியமா சொல்றேன் ....இது நம்ம ஊரு மெரீனா கடற்கரைத...
-
▼
May
(18)
பக்கங்கள்
May
21
Thanks to :www.saravanakumaran.com
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரை இடுக ...:
Post a Comment