ராஜ பார்வை

எனது பார்வையில் படும் அனைத்தும் ராஜாங்கத்தில் இடமளிக்கப்படும்

பக்கங்கள்

என்னமோப்பா.! சொல்னுன்னு தோனிச்சு..சொல்லிட்டேன். அடிச்சாலுஞ்சரி.




இப்ப எங்க போனாலும் மொழிப்போர்,மொழிப்பாதுகாப்புன்னு கெடக்கு. நானும் யோசிச்சு யோசிச்சு பாக்குறேன்..திடீர்னாப்ல மொழிக்கு இப்ப என்ன ஆபத்து வந்திடுச்சுன்னு..யாராச்சும் உன் மொழியில பேசக்கூடாதுன்னோ, படிக்கக்கூடாதுன்னோ இல்லன்னா இனிமே வேற மொழியிலதான் பேசனும்னோ, படிக்கனும்னோ மெரட்ராங்களா?

என்னா எதுக்குன்னு தெரியாமலே 'கட பேர அழி,பட பேர மாத்து'ன்னு ஆளாளுக்கு கத்துறாய்ங்க..குத்துறாய்ங்க. எத எப்டி செய்யனுன்னு இவிங்க சொல்றபடிதாஞ் செய்யனுமாக்கும். இதுல 'அப்டி சொல்லு..என்னையுஞ் சேத்துக்கோ'ன்னு கூட்டணி(கூத்தணி) வேற.

'கன்னடனுக்கு வெறி புடிச்சிறுச்சி'ன்னாய்ங்க..இப்ப அவிங்க இத என்னாம்பாய்ங்க? இப்டியே நாட்ல எல்லாரும் ஆரம்பிச்சாய்ங்கன்னா ஊரு உருப்படுமா? ஊருவிட்டு ஊரு போவ முடியுமா?

யோவ்..! யாருமே எந்த மொழியையுமே தேவப்பட்டாத்தேம் பேசுறோம். தேவயில்லாம பேசாதீங்கய்யா! யாரோ கண்டுபுடிச்ச 'கம்ப்யூட்ருக்கு' கணினின்னு பேரு வக்கிறோம், ஆனா அவங்கண்டுபுடிச்ச விண்வெளிக்கல்லுக்கு 'பொங்கல்'னு பேரு வச்சிகிறான். உடனே 'அவனுக்குத் தெரியிது அரும'ன்னு செல்றீங்க..அரும தெரிஞ்சா வச்சான்? பெருந்தண்மையா வச்சான்.
'எட்டுத்திக்கும் போய் எல்லாத்தையுங் கட்டிட்டுவந்து கொட்டுங்கப்பா'ன்னு நம்ம பாரதிதாசரு சொன்னாரோல்லியோ? குண்டுச்சட்டில குதிரை ஓட்டுனா எட்டுத்திக்கும் எப்டிய்யா போறதுன்னேன்?

இன்னொன்னுஞ் சொல்லிக்கறேன்..நாவொன்னுந் தாய்மொழிய மறந்துருன்னு சொல்லல. ஒரு சமுதாயத்தோட அடையாளம் மொழிதான். எல்லா மொழிக்காரனும் கூடுற இடத்துல, 'அய்யோ..அம்மா'ன்னு கத்துனா எல்லாருந் திரும்புவாங்க..ஆனா மத்தவன்லாம் பாத்துட்டு போய்க்கிட்டே இருப்பான்..நம்மாளு மடடும் நின்னு என்ன ஏதுன்னு கேப்பான். அதான்யா அடையாளம்.

அத மத்தவனும் மதிக்குபோதுதான் அது உயருது. எப்ப மதிப்பான்? நம்ம சரக்கு நல்லாயிருந்தாத்தான். நம்ம சரக்கு 'கட பேர்லயும்,பட பேர்லயும்' இல்லய்யா. கலையிலயும் பண்பாட்டுலயும் இருக்கு. அத மேம்படுத்த பாருங்க.

இயல்,இசை,நாடகம்னு எவ்ளவோ இருக்கு, திரைப்படத்துல அத கொண்டுவரச்சொல்லுங்க, எங்கயோவுல்ல கலாச்சாரத்த இங்க நடக்குதுன்னு காட்றாங்களே அத நிறுத்தச்சொல்லுங்க. நம்ம நடை,உடை,பாவனைகளை கேலியா காட்னா (கச்சய கட்னா..கோடு போட்ட உள்ளாடை..ஏன்..போடக்கூடாதா?) தடைவாங்கி நீக்கச்சொல்லுங்க.

நம்மவூரு தொலைக்காட்சி நிகழ்ச்சில தொர மாதிரி பேசறாங்களே அத எதித்து கொரலுவுடுங்க. நலிவடஞ்சிட்டுபோற கிராமியக் கலைஞர்களை ஊக்குவிக்க புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கச் சொல்லுங்க.

கவிஞர்கள்,இசைஞர்கள் கூட்டு முயற்சில நல்ல தொகுப்புகள் வெளிவரச்செய்யுங்க, நம்மாளுங்களோட தரமான படைப்புகள உலக மொழிகள்ல மொழிபெயர்க்க இயக்கம் நடத்துங்க. இதன் மூலமா புதிய தொழில் வேலை வாய்ப்புகள உண்டக்குங்க.

இப்டி ஆக்கபூர்வமா எவ்ளவோ செய்றத உட்டுபுட்டு 'அடுத்தவன் உரிமைல' ஏன்யா தலவுடுறீங்க?

என்னமோப்பா.! சொல்னுன்னு தோனிச்சு..சொல்லிட்டேன். அடிச்சாலுஞ்சரி.

0 கருத்துரை இடுக ...: